Categories
உலக செய்திகள்

பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட…. சிறுகோளை வெற்றிகரமாக…. திசைதிருப்பிய நாசா…!!!!

விண்வெளியில் வான் பொருளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ள சாதனை தற்போது அரங்கேறியுள்ளது.

சூரிய மண்டலத்திலுள்ள கோள் பூமி. பூமியை சுற்றிக்கொண்டு லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கின்றதா? என விஞ்ஞானிகள் கண்காணித்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க “கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ)” ஒன்றை நிறுவியுள்ளது.

இந்த அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை கண்டுபிடித்தது. இந்த டிடிமோஸ் பைனரி சிறுகோளை பூமி மீது மோதுவதை தடுத்து அதை திசைதிருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் நாசாவால் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏவப்பட்ட அந்த விண்கலம் பூமி மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட சிறுகோள் மீது வெற்றிகரமாக மோதப்பட்டுள்ளது.

இதனால், அந்த சிறுகோளால் பூமிக்கு ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விண்கலம் வெற்றிகரமாக சிறுகோள் மீது மோதிய  அந்த கோளின் பயண திசை விரைவில் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுகோள் வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டுள்ளதாக நாசா இன்று தெரிவித்துள்ளது. மேலும் 11 மணி 55 நிமிடமாக இருந்த அந்த சிறுகோளின் சுற்றுப்பாதையானது, தற்போது விண்கலம் மோதலுக்கு பிறகு 11 மணி 23 நிமிடங்களாக குறைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அதாவது சிறுகோளின் சுற்றுப்பாதையானது 32 நிமிடங்கள் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் வான் பொருளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ள சாதனை தற்போது அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |