Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோடையில் உடல் சூட்டை தணிக்கும்…பரங்கிக்காய் துவையல்…!!

பரங்கிக்காய்  துவையல் செய்ய தேவையான பொருள்கள்:

பரங்கிக்காய் நறுக்கியது                      – 1 கப்
உளுத்தம் பருப்பு                                      – கால் கப்
காய்ந்த மிளகாய்                                      –  4
புளி                                                                  –  கொட்டைப்பாக்கு அளவு
பெருங்காயத்தூள்                                    – கால் டீஸ்பூன்
எண்ணெய்,உப்பு                                        – தேவையான அளவு                                                                                    கடுகு                                                               –  தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் எண்ணெயை சிறிது ஊற்றி சூடானதும் 1 கப் நறுக்கிய பரங்கிக்காயை அதில் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து சிறிய பாத்திரத்தில் ஆற வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வதக்கிய பரங்கிக்காய், பெருங்காயத்தூள், உப்பு, புளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து  நைஸாக அரைக்கவும் .

கடாயில்  என்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த பரங்கிக்காயையும் சேர்த்து கிளறினால் சுவையான பரங்கிக்காய் துவையல் தயார்.

Categories

Tech |