Categories
சினிமா தமிழ் சினிமா

பும்ரா இவரைத்தான் கல்யாணம் செஞ்சுக்க போறாரா…. அனுபமா செய்த ட்விட்…. ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள்…!!

பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அனுபமாவைத் தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் பும்ரா. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ரா தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி அணியில் இருந்து விலகியுள்ளார். அவரின் இந்த முடிவுக்கான காரணம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அதில் அவர் “நான் திருமணத்துக்கு தயாராவதால் விடுப்பு எடுத்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியையும் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் பும்ரா யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகை அனுபமா பும்ராவின் காதலி என்று சொல்லப்பட்டது. தற்போது அனுபமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இனிய விடுமுறை எனக்கு” என்று பதிவிட்டுள்ளார். இதனால் பும்ரா அனுபமாவை தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CL3uW_0JSE5/

 

Categories

Tech |