Categories
சினிமா தமிழ் சினிமா

பும்ரா யார கல்யாணம் பண்ணிக்க போறாரு தெரியுமா?… வைரலாகும் புகைப்படம்…!!!

 இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நடிகை அனுபமாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் டி 20 மற்றும் ஒரு நாள்  டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா  4 வது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதா பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளார். பும்ரா விலகியதற்கு சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. தற்போது திருமணத்திற்காக தான் விடுப்பு எடுத்து இருக்கிறார் என்பத தெரிய வந்தது.

இந்நிலையில் பும்ரா திருமணம் செய்து கொள்வதாக கூறப்படும் பெண் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. பும்ரா விடுப்பு எடுத்த ஓறிரண்டு  நாளிலேயே தானும் விடுப்பில் இருப்பதாக அனுபாமா தனது இன்ஸ்டாவில்  பதிவு செய்துள்ளார். இதனால் பும்ரா அனுபவமா இருவரும் காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அனுபாமா ராஜ்கோர்ட்டிற்கு சென்று கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளதையடுத்து பும்ராவில் சொந்த ஊர் குஜராத் என்பதால் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கிசு கிசு எழுந்துள்ளது.

இந்த தகவல் குறித்து அனுபாமாவின் தாயார் சுனிதா பரமேஸ்வரன் அனுபாமா பும்ராவும்  இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்து வருகின்றனர். அனுபாமாவை திரையுலகத்தினர் மறந்திருக்கும் வேளையில் இவ்வாறு புதிய கதை உருவாக்கியுள்ளனர். இதற்கு முன்பும் ஒருமுறை அனுபாமா மற்றும் பும்ரா பற்றி  வெளியிட்டுள்ளனர். இவ்வாறு கூறி வருவதால் தான் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார்கள்.

சில நாட்களுக்கு முன் அனுபாமா படப்பிடிப்பிற்காக ஒரு விடுதியில் தங்கியிருந்த போது பும்ராவும்  அதே விடுதியில் தங்கி இருப்பது தெரிய வந்தது .அப்போதுதான் முதல்முறையாக இருவரும் சந்தித்துக் கொண்டனர். அதன் பிறகு இவ்வாறு அடிக்கடி செய்தி வெளியாகி வருவது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை என்று சுனிதா பரமேஸ்வரன் தெரிவித்தார். தற்போதும் அனுபாமா ராஜ்கோடிருக்கு படிப்பிற்காக தான் செ ன்றிருக்கிறார்.அனுபாமா மற்றும் பும்ரா திருமணம் பற்றி இணையதளத்தில் வெளியாகி வரும் தகவல்கள் எதுவும் உண்மை இல்லை வெறும் வதந்தியே என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |