Categories
விளையாட்டு

பும்ராவின் காதல் கதை… மெஹந்தியில் வெளிப்படுத்தும் மனைவி….!!

இந்தியாவில் வேகப் புயலாக விளையாடும் பும்ராவின் காதல் எப்போது நிலவியது என்பதை அவரின் மனைவி சஞ்சனா மெஹந்தி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சில நாட்களுக்கு விடுப்பு கேட்டு காரணம் தெரிவிக்காமல் விளையாட்டில் இருந்து விலகியுள்ளார். ஆனால் இவரின் திருமணத்திற்காக தான் விடுப்பில் சென்றுள்ளார் என்று தகவல் வெளியான நிலையில் மணப்பெண் யாரென்பதை இறுதிவரை ரகசியமாக வைத்துள்ளனர். பிறகு அவர் விளையாட்டு வர்ணனையாளராக திகழும் சஞ்சனா கணேசனின் மகளை  திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற தகவல் ரகசியத்தின் பெயரில் வெளியானது.

இந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு பும்ரா-சஞ்சனா திருமணம் கோவாவில் சிறப்பாக நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நேரத்திலேயே அவர்களின் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது வாழ்த்துக்களை பெற்றுள்ளது. இதனிடையே மெஹந்தி நிகழ்ச்சியின்போது சஞ்சனா தனது கையில் 2019 உலக கிண்ணம் கோப்பையைவரைந்துள்ளார். எனவே இவர்களின் காதலும் அப்போதுதான் மலர்ந்திருக்கும் என்று ரசிகர்கள் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர.

விளையாட்டு தொகுப்பாளினியாக இருந்த சஞ்சனா இங்கிலாந்தில் நடைபெற்ற 2019ஆம் உலகக்கிண்ணம் தொடரை தொகுத்து வழங்கியுள்ளார். அவரின் கணவன் உலகக்கிண்ணம் தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய பும்ரா 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது உலகம் முழுவதும் தெரியக் கூடிய ஒன்றாகும். ஆனால் அந்தத் தொடரில் முக்கியமான மற்றொரு விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார் என்பது தற்போது தான் பலருக்கும் தெரிந்துள்ளது.

Categories

Tech |