மூன்றரை லட்சம் ருபாய்காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்குமாறு கோர்ட் தீர்ப்பளித்தது
ராணிப்பேட்டையில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் ரூபாய் மூன்றரை லட்சம் காசோலையை அமிர்தலிங்கத்திற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் வங்கியில் பணத்தை போடாத காரணத்தால் அந்த காசோலை திரும்பி வந்தது.
இதனையடுத்து ராணிப்பேட்டை கோர்ட்டில் அமிர்தலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் தெய்வீகன் என்பவர் கோவிந்தராஜ் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார் மேலும் கோவிந்தராஜ் அப்பணத்தை திரும்ப கொடுக்க வில்லை எனில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.