ஆந்திராவில் புனித தலங்களுக்கு பயணிக்கும் பக்தர்களுக்கு சிறப்பான சுற்றுலா திட்டங்களை IRCTC அறிமுகம் செய்து உள்ளது.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் போன்ற மாதங்களுக்கு 3 புதிய சுற்றுலா திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜனவரி 21 முதல் 31 வரையிலான முதல் சுற்றுலா திட்டத்தில் குஜராத் புனித தலங்களுக்கு செல்வதற்கு ரயில்கள் இயக்கப்படும்.
சோம்நாத், துவாரகா, அகமதாபாத், சர்தார் பட்டேலின் ஒற்றுமை சிலை போன்ற இடங்களுக்கு ரயில் மூலமாக சுற்றுலா செல்லலாம். இதற்கான உணவு படுக்கை வசதியுடன் கட்டணம் 10,000 ஆகவும் 3-வது ஏசி கட்டணம் 17,000 ஆகவும் இருக்கும். இதேபோன்று பாரத தரிசனம் என்று மற்றொரு சுற்றுலாத் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. மதுரா, ஆக்ரா, ஹரிதுவார், வைஷ்ணவ தேவி கோவிலுக்கு இதில் சுற்றுலா போக முடியும். இதை தவிர திருப்பதி உள்ளிட்ட தலங்களுக்கும் சிறப்பான ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது.