Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக நின்று அடித்த கெய்ல்….. பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு..!!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது   

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், கே.எல் ராகுலும் களமிறங்கினர்.

கிறிஸ் கெய்ல் தொடக்க முதலே அதிரடியில் இறங்கினார். சிறிது நேரம் தாக்கு பிடித்த கேஎல் ராகுல் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு  வந்த  மயங் அகர்வால் 15, சர்பராஸ் கான் 15, சாம் கர்ரன் 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் கெய்ல் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தார்.

கடைசியில் அதிரடியாக விளையாடிய கெய்ல் 64 பந்துகளில் 99* ரன்கள் (10 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவர்  1 ரன்னில் சதத்தை தவற விட்டார். அவருடன் மன்தீப் சிங் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.  இறுதியில் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழந்து 173 ரன்கள் குவித்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக யூஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், மொயீன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 174 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

 

 

Categories

Tech |