கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 197 ரன்கள் குவித்துள்ளது.
ஐ.பி.எல் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்துகிறார். இந்நிலையில் டாஸ் வென்ற வென்ற கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்லும், கே.எல் ராகுலும் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக கெய்ல் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அதன் பின் கெய்ல் 36 பந்துகளில் 63 ரன்கள் (7 சிக்ஸர், 3 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த டேவிட் மில்லர், கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார்.
அதன் பின் மில்லர் 7, கருண் நாயர் 5, சாம் கர்ரன் 8 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் ஒருபுறம் கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடினார். இறுதியில் 19 வது ஓவரில் கே .எல் ராகுல் அதிரடியாக 3 சிக்ஸர் 1 பவுண்டரி என விளாசினார். அந்த ஓவரில் 25 ரன்கள் சேர்ந்தது. கடைசி ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து சதத்தை நெருங்கினார். அதன் பின் சதம் அடித்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 197 ரன்கள் குவித்தது. கே.எல் ராகுல் 100* (64) ரன்களிலும், மன்தீப் சிங் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும், பெஹெரெண்டாரா ஃப், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 198 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.