Categories
உலக செய்திகள்

கணவரை இழந்த மகாராணிக்கு… அடுத்தடுத்து ஏற்பட்ட சோகம்… அரண்மனை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்..!!

பிரித்தானியா மகாராணியின் கணவர் இறந்ததை தொடர்ந்து தற்போது அவருடைய இரண்டு நாய்க்குட்டிகளும் இறந்துள்ளது மகாராணிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள St Bartholomew’s மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது மகாராணியார் கோட்டையில் தனியாக இருந்ததால் அவருக்கு துணையாகவும், ஆறுதலாகவும் இருக்கும் என்று அழகிய குட்டி நாய்களை மகனும், இளவரசனுமான அன்றெவ் பரிசாக வழங்கியுள்ளார். அந்த நாய்களுக்கு டார்ஜி, பெர்குஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இளவரசர் பிலீப் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் பெரும் வருத்தத்தில் இருந்த மகாராணியாருக்கு அந்த இரண்டு நாய்களும் ஆறுதலாக இருந்து வந்தது. இந்நிலையில் அந்த இரண்டு நாய்களும் தற்போது இறந்து விட்டதாகவும், அதனால் மகாராணியார் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் மட்டுமே இதை உறுதி செய்ய முடியும்.

Categories

Tech |