Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மாவின் படங்களை பார்த்து கதறி அழுத நரிகுறவ மக்கள்..!!

தூத்துக்குடியில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மாவின் புகைப்படங்களை பார்த்து நரிக்குறவ மக்கள்  கதறி அழுதது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற திரைப்பட பாடலுக்கு இனங்க  மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரையும், மாண்புமிகு அம்மாவையும்  அடித்தட்டு மக்கள் தெய்வமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் மாத கோவில் திருவிழாவையொட்டி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மாவின் புகைப்படங்கள் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன.

அவ்வழியாக சென்ற நரிக்குறவ இன மக்கள் அந்த படங்களை பார்த்து கண்ணீர் விட்டு அழுததுடன், தங்களை காப்பாற்ற உங்களைப் போல் நல்ல உள்ளங்கள் இப்போது இல்லையே எனக் கதறியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அடித்தட்டு மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரும் மாண்புமிகு அம்மாவும் பல்வேறு திட்டங்களை செய்தார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்தது.

Categories

Tech |