புஷ்பா திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி இருக்கிறது.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா நடனம் ஆடிய ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது.
இந்நிலையில் புஷ்பா திரைப்படம் நேற்று இரவு 8 மணிக்கு பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி 27 முதல் 30 கோடி வரை புஷ்பா படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.