அரிசி நமக்கு உணவை தவிர வேறு என்னென்ன வகைகளில் பயன்படுகிறது என்று இங்கே பார்க்கலாம்.
நாம் அன்றாடம் நம்முடைய சமையலறையில் அரிசியை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், சமையல் அறையை தவிர வேறு எந்த இடங்களில் எல்லாம் இந்த அரிசியை பயன்படுத்த முடியும் என்று என்றாவது யோசித்ததுண்டா? இதோ சமையலறைக்கு வெளியே அரிசி சம்பந்தப்பட்ட ஏராளமான பயன்கள் உள்ளன. உதாரணமாக, உங்கள் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் அரிசி பானையில் போட்டு உலரவைக்கலாம்.
1.உங்கள் ஸ்மார்ட் போனை நீர் சேதத்தில் இருந்து காப்பாற்ற ஒரு அரிசி பையில் செல்போனை வைத்தால் உலர்ந்த அரிசி ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.
2.சில நேரங்களில் நமது அலமாரிகள் ஈரப்பதத்துடன் காணப்பட்டாலோ அல்லது துவைத்த துணிகள் நன்றாக உலருவதற்கு முன்பே அதை உங்கள் அலமாரியில் வைத்தாலோ துணிகளில் ஊசல் வாடையை வரும் இதை நீக்க அரசியில் சில துளி அத்தியாவசிய எண்ணெய்யை சேர்த்து ஏர் ஃப்ரெஷனர் பயன்படுத்தலாம். இதனால் அலமாரி அழகான நறுமணத்தை பெரும்.
ஏர் ஃப்ரெஷனர் தயார் செய்வதற்கு:
தேவையானது:
1.ஒரு கப் அரிசி (வெள்ளை அரிசி நன்றாக உதவும்) கொஞ்சம்.
2.அத்தியாவசிய எண்ணெய்.
3.ஒரு கிண்ணம், ஒரு சிறிய துணி மற்றும் ஒரு எலாஸ்டிக் பேண்ட்.