Categories
தேசிய செய்திகள்

“ஒரு நாளைக்கு 150 பரோட்டா போடுவேன்”… பல கனவுகளுடன் பரோட்டா போடும் சட்ட கல்லூரி மாணவி…!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரின் கதையை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர் தனது குடும்பத்துடன் சபரி மலைக்குச் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவரது தந்தை அனஸ்வரா சிறு வயதாக இருக்கும் பொழுது அவரை விட்டு சென்றுவிட்டார். பின்னர் அவரது தாய் அந்த ஹோட்டலின் பொறுப்பை எடுத்து நடத்தி வருகிறார். இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. முதலில் டீ போட்டும் சில உணவுகளை தயாரித்து வழங்கி வந்தன.

அனஸ்வராவுக்கு பதிமூன்று வயது இருக்கும் பொழுது அந்த ஓட்டலில் தாமும் தாய்க்கு உதவியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து பரோட்டா போடுவது எப்படி என கற்றுக் கொண்டார். முதலில் அடுப்பில் வரும் போது சிறிய தீ காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும் குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டும் என்று துணிச்சலுடன் போராடி நாளுக்கு நாள் புரோட்டா மாவு செய்வது எப்படி என தொடங்கியதிலிருந்து புரோட்டாவை சுட்டு அதை தட்டி எடுப்பது வரை வேலை செய்ய ஆரம்பித்தார்.

அதற்காக அவர் படிப்பையும் விட்டு விடவில்லை. பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவர் பரோட்டா போடும் தொழிலை செய்து வருகிறார். ஒருநாளைக்கு 150 பரோட்டா போடுவாராம். தற்போது 23 வயதாகும் அவர் தொடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை பயின்று வருகிறார். ஒருபுறம் புரோட்டா போடுவது, மறுபுறம் தனது சட்டப் படிப்பை படிப்பது என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதை முடித்தவுடன் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சி தேர்வு எழுத திட்டமிட்டுள்ளார். பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

Categories

Tech |