‘பீஸ்ட்” ட்ரைலர் யூடியுபில் மாஸான சாதனை படைத்துள்ளது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், தற்போது ”பீஸ்ட்” ட்ரைலர் யூடியுபில் மாஸான சாதனை படைத்துள்ளது. அதன்படி, இந்த ட்ரெய்லர் வெளியான 20 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#BeastTrailer hits a massive 25Mil+ views now 🔥
Innum bayangarama irukapoguthu 😎▶ https://t.co/WJQDt0BPXX@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/iviDPPRcT3
— Sun Pictures (@sunpictures) April 3, 2022