செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முறையாக கால்வாய்களை பராமரித்து தூர்வாரி இருந்தால் நிச்சயமாக ஏறக்குறைய பல டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாவதை நாம் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு அதை கடலில் சென்று வீணாவதை தடுக்க முடியாத இந்த அரசு வீணான மழை நீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு அனுப்பி விட்டது.
அதேபோன்று பருவமழை எதிர்நோக்குகின்ற ஒரு சூழ்நிலையில் சென்னையில் ஒரு வேலை நடந்த மாதிரி தெரியவில்லை, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, அதேபோல மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவுமே இந்த விடியாத அரசு எடுக்கவில்லை என்பதுதான் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
பல தடவை நாங்கள் சொல்லிவிட்டோம், டிடிவி தினகரன் இணைப்பதற்கு ஒரு வாய்ப்பே இல்லை, பத்தாயிரம் சதவீதம் கூட கிடையாது. அதுக்கு மேல லட்சம் %, கோடி % போட்டுக்கோங்க, வாய்ப்பே இல்லை. அதனால் ஒரு பாசாங்கு வந்து ஏதோ திடீர்னு, ஒரு கட்சி புரட்சி தலைவர் கண்ட சின்னம் இரட்டை இலை, அந்த இரட்டை இலைக்கு ஒரு மகத்தான வெற்றியை தேடி தந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா.
அந்த இரட்டை இலையையே எதிர்த்து நின்று, அம்மாவுடைய அரசையே கவிழ்க்க நினைத்தவர்கள், அவர்கள் போய் இன்றைக்கு பாசாங்கு செய்வது போல, அதாவது என்னவென்றால் பசுந்தோல் போர்த்திய நரி என்று தான் சொல்லுவேன், புலி என்று கூட சொல்ல மாட்டேன்.
அதுபோல் பசுந்தோல் போத்திக்கொண்டு நாங்கள் அண்ணா திமுக விமர்சனம் செய்யவில்லை , நாங்கள் அண்ணா திமுகவில் ஒருங்கிணைத்து போறோம் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் கட்சியில் உள்ள தொண்டர்களும் சரி, எங்கள் கட்சியும் சரி, திருமதி சசிகலாவும், டிடிவி தினகரனையும் ஏற்றுக் கொள்வதாக இல்லை என தெரிவித்தார்.