செம்மொழி நிறுவனத்தின் ஒரு முக்கிய அம்சமாக பிரெய்லி நூல் பதிப்பு திட்டம் அமைந்துள்ளது. இது பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக இருக்கிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 41 தமிழ் செவ்வியல் நூல்கள் உட்பட 46 தமிழ் நூல்களையும் பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டத்தின் பணிகள் நிறைவடைய இருக்கிறது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நம்பியகப் பொருள், யாப்பெருங்கலங்காரிகை, தண்டியலங்காரம், புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல், இறையனார் அகப்பொருள், முத்தொள்ளாயிரம், மணிமேகலை, சிலப்பதிகாரம், கைந்நிலை, ஏலாதி, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை, திரிகடுகம், திருக்குறள், சிறுபஞ்சமூலம், பழமொழி, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நான்மணிக்கடிகை, நாலடியார் மலைபடுகடாம், பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெருநராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றினை மற்றும் தொல்காப்பியம் உட்பட 46 நூல்கள் பிரெய்லி வடிவில் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த நூல்கள் அச்சிடும்படி டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்த பிறகு பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.