Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!… தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு?… அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி திட்ட மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி கிண்டியில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், டிசம்பர் 22-ஆம் தேதி திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த மருத்துவமனையில் வயது மூத்தோருக்கான தனி மருத்துவமனை கட்டிடமும் கட்டப்பட்டு கூடிய விரைவில் அதுவும் பயன்பாட்டுக்கு வரும்.

அதன் பிறகு நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருவதோடு நீட் தேர்வு எதற்காக ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கு காலதாமதம் செய்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என்று மறுப்பு தெரிவிக்கவில்லை. கண்டிப்பாக தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் சொன்ன தகவல் தமிழக மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |