தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
அதன் பிறகு ரஜினியின் 171-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், சிபிச் சக்கரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்காததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரஜினியின் 171-வது படத்தை கோமாளி மற்றும் லவ் டுடே போன்ற படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரதீப் ரங்கநாதனுடன் லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.