Categories
மாநில செய்திகள்

அப்படிபோடு! இனி யாரும் மாணவிகள் கிட்ட வாலாட்ட முடியாது…. “போலீஸ் அக்கா” இருக்காங்க…. செம திட்டம் அறிமுகம்….!!!!!

கோவை மாநகர் காவல்துறை சார்பில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர் பகுதியில் செயல்படும் 60 கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 37 பெண் காவலர்கள் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் திட்டத்தின்படி ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டு மாணவிகளுடன் உரையாடுவது, அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை கேட்டல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்து மீட்டல் என அவர்களுக்கு உரிய முறையில் உதவி செய்வார்கள். அதன் பிறகு கல்லூரிகளில் நடக்கும் மோதல் மற்றும் போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்வார்கள்.

இதேபோன்று மாணவிகளுடன் பெண் காவலர்கள் சக தோழிகள் போன்று பழகி அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ரகசியமாக வைத்து சரி செய்து கொடுப்பார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் அக்கா திட்டத்தினை ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

Categories

Tech |