Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு செம! மாஸ்…. ஆஸ்கர் விருதில் அதிரடியாக நுழையும் RRR….. 16 பிரிவுகளில் போட்டி…. குஷியில் ரசிகர்கள்….!!!!

RRR திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ளதாக அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஆலியா பட் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆன ஆர்ஆர்உர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பொது பிரிவில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. இந்த தகவலை அந்த படத்தின் அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படம் ஆஸ்கர் விருதில் சிறந்த விஎஃப்எக்ஸ், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 16  பிரிவுகளில் போட்டியிடுகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |