தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது துணிவு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் பிறகு துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2-ம் பாடலான காசேதான் கடவுளடா பாடலும் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் மொத்த ரன்னிங் டைம் 165 நிமிடம். அதாவது 2 மணி நேரம் 45 நிமிடம் ரன்னிங் டைம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் துணிவு படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிய பிறகு சரியான ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது.