Categories
மாநில செய்திகள்

அப்படி போடு! தியேட்டரில் 100% இருக்கை அனுமதி கூடாது – மத்திய அரசு அதிரடி …!!

தியேட்டர்களில் 100% இருக்கைக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 50% இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. படங்கள் ஓடிடியில் வெளியாகின. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாக இருக்கின்றன. இதனால் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதி வேண்டும் என்று நடிகர் விஜய், சிம்பு ஆகியோர் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்தார். இதற்கு சினிமா துறையினர் பலரும் வரவேற்பு அளித்தனர். ஆனால் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. 100% இருக்கைகள் அனுமதித்தால் கொரோனா மிக எளிதாக பரவ கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். மேலும் டாக்டர் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள் குறித்த கடிதம் ஒன்றும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தமிழக அரசு இந்த முடிவில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. தற்போது மத்திய உள்துறை தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |