Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!!… நடிகர் சிம்புவின் “பத்து தல” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரிலீசான மாநகரம் மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படம் கன்னட படமான மஃப்டி என்பதன் ரீமேக் படம் ஆகும். இந்நிலையில் அடிக்கடி ரிலீசுக்கு தள்ளிப்போனா பத்து தல திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த வருடம் மார்ச் மாதம் 30-ம் தேதி நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று பட குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |