நகைகளை அடகு வைத்து கடன் பெற்ற விவசாயிகளின் பயிர்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். மொத்தம் 18,43000 விவசாயிகள் வாங்கிய விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய போவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு நகையை வைத்து விவசாய கடன் பெற்று இருந்தாலும் அதுவும் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவே தமிழக முதல்வர் எடப்பாடி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளார். இதில் பத்திரங்களை வைத்து அல்லாமல், நகைகளையும் அடகு வைத்து கடன் பெற்றவர்களுடைய கடனும் தள்ளுபடி செய்யப்படும் “என்று தெரிவித்துள்ளார்.