புதுச்சேரியில் உள்ள அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் Modi @ 20: Dreams meat Delivery என்ற புத்தக கருத்தரங்கு கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் பிறகு நிகழ்ச்சியின் போது வேல்முருகன் பிரதமர் மோடியின் கனவு திட்டம் குறித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், பாஜக மாநில தலைவர் சுவாமிநாதன், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார், அமைச்சர் நமச்சிவாயம் உட்பட கலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் போது அமைச்சர் எல். முருகன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும், கடந்த வருடத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை விரிவாக்கம் செய்வதற்கு ஒன்றிய அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் கூறினார்.
அதோடு மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டப் படிப்புகளை அவரவர் தாய் மொழியில் படிப்பதற்கான புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு வகுத்து வருகிறது என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் எல். முருகன் மீனவ சமுதாய மக்களுடன் உரையாற்றினார். மேலும் மாநில அரசின் வளர்ச்சி குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.