Categories
மாநில செய்திகள்

போடு செம!… இனி இந்த ரயில்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் பறக்கும்…. தெற்கு ரயில்வே சொன்ன மாஸ் தகவல்….!!!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட  ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை முதல் ரேணிகுண்டா பாதையில் ஏற்கனவே ரயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ரயில்வே ஆணையரின் அனுமதிக்கு பிறகு இன்னும் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

அதன் பிறகு சென்னை முதல் திண்டுக்கல், ஜோலார்பேட்டை முதல் போத்தனூர் மற்றும் அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளிலும் ரயில்களின் வேகம் 130 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட இருக்கிறது.இதனையடுத்து அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரை மேம்பாட்டு பணிகள் முடிவடைந்த பிறகு வந்தே பாரத் ரயில் மற்றும் சதாப்தி ரயில்களின் வேகமானது அதிகரிக்கப்படும்.

இதைத்தொடர்ந்து கோவை வடக்கு- மேட்டுப்பாளையம், தஞ்சாவூர்- காரைக்கால், விழுப்புரம்-புதுச்சேரி, நாகர்கோவில்- திருநெல்வேலி, விழுப்புரம்-காட்பாடி, தஞ்சாவூர்- பொன்மலை, விருத்தாச்சலம்- சேலம், மதுரை-வாஞ்சி மணியாச்சி, திண்டுக்கல்- பொள்ளாச்சி, கடலூர் துறைமுகம்- விருத்தாச்சலம், சேலம்-கரூர்- நாமக்கல், நெல்லை- தென்காசி, தாம்பரம்- செங்கல்பட்டு, நெல்லை- திருச்செந்தூர், அரக்கோணம்- செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் செல்லும் ரயில்களில் வேகமானது 110 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட இருக்கிறது. மேலும் சென்னை- பெங்களூர் ரயில் சேவைகளை 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |