Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”ஆர்.ஆர்.ஆர்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. இந்த படத்தோட போட்டியா?…!!!

‘RRR’ படத்தின் புது ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் ராஜமவுலி ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இவர் இயக்கத்தில் தற்போது ”ஆர்ஆர்ஆர்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

RRR (film) - Wikipedia

இந்நிலையில், இந்த படத்தின் புது ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த படத்தின் ரிலீஸ் வரும் மார்ச் 18ஆம் தேதி அல்லது ஏப்ரல் மாதம் 28 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விஜய்யின் ”பீஸ்ட்”  திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திரைப்படம் ஏப்ரல் 14 அன்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ”RRR” படம் ”பீஸ்ட்” திரைப்படத்துடனான  மோதலை தவிர்த்துள்ளது

Categories

Tech |