Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”வலிமை”….. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

‘வலிமை’ திரைப்படம் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. பிப்ரவரி மாதம் திரையரங்கில் ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. போனி கபூர் தயாரித்த இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அஜித் வலிமை திரைப்படம்: வில்லனாக வரும் பைக் கேங்கின் பின்னணி இதுதான்  -NewsSense Exclusive | Real Story on Ajith Valimai Antagonist - Satan Slaves

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்தார். ஹீமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரிலீசானது. இந்நிலையில், இந்த திரைப்படம் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே 1ஆம் தேதி இந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |