‘பீஸ்ட்’ படத்தின் அசத்தலான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அரபிக் குத்து பாடல் மற்றும் சில அதிரடி காட்சிகளுடன் இந்த புரோமோ உள்ளது. தற்போது ரசிகர்கள் இந்த புரோமோவை இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர்.
#Beast New Promo 💥@actorvijay #BeastMovie #BeastModeON pic.twitter.com/ilYBxg5SOS
— Vimal (@Kettavan_Freak) April 10, 2022