Categories
சினிமா தமிழ் சினிமா

போடு தகிட தகிட…. “வலிமை” முதல் சிங்கிள் இன்று ரிலீஸ்…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

‘வலிமை’ படத்தின் முதல் சிங்கிள் இன்று ரிலீசாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை குரேஷி நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை காண ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இன்று இரவு 10 மணிக்கு வலிமை படத்தின் முதல் சிங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |