Categories
அரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பந்தல் போடு….. ஒட்டு கேளு…. திமுகவினர் அலப்பறை ….. விரட்டிய போலீஸ் ……!!

வாக்குச்சாவடி அருகே நின்று திமுகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறிவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Image result for வாக்குப்பதிவு

அதேபோல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் , திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வருகின்ற இடைதேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

Image result for திமுக

இந்நிலையில் , நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தெய்வநாயகிபேரியில் உள்ள வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு 45 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இதிலும் விக்கிரவாண்டி விஏஓ அலுவலகம் எதிரே பந்தல் அமைத்து திமுகவினர் வாக்கு சேகரித்ததை காவல் ஆய்வாளர் அகற்றக்கூறியதால் திமுக-காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |