மும்பையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உட்பட 1800 பேரை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு விலக்கியுள்ளது
சர்வதேச அளவிலான பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்கும் அமைப்புகளில் ஒன்றான எஃப்.ஏ.டி.எஃப். சமீபத்தில் பாகிஸ்தான் அரசு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கண்காணிக்கப்பட்டு வரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்திற்கும் அதிகமாக கணக்கிடப்பட்டு இருந்தது.
தற்போது அந்த எண்ணிக்கையில் 1,800 பெயரை நீக்கி குறைவான பட்டியலை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. வெளியிட்ட புதிய பட்டியலில் 2008ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட சகிர் அல் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாதிகளின் பெயர்கள் விடுபட்டதாக தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட இச்செயலுக்கு எஃப்.ஏ.டி.எஃப் கண்டனம் தெரிவித்து விரைவில் தக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளது.