மசாலா டீ
தேவையானபொருட்கள்:
பால் – 250 மில்லி
டீத்தூள் – 1 ஸ்பூன்
சர்க்கரை – 2 ஸ்பூன்
மிளகு – 5
பட்டை – சிறிய துண்டு
ஏலக்காய் – 2
கிராம்பு – 1
துருவிய இஞ்சி – 1/2 ஸ்பூன்
செய்முறை :
முதலில் மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் இஞ்சி ஆகியவற்றை இடித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும் . பின் இதனுடன் , டீ தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின் சர்க்கரை, இடித்து வைத்துள்ள மசாலா சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டினால் சுவையான மசாலா டீ தயார்!!!