சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்திருக்கிறார்.
சென்னை மாநகராட்சியில் குப்பை உள்ளவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்ற குப்பை சேகரிப்பு சேவைக்கட்டணம் தரம் பிரிக்கப்படாத,
பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை என சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடுமையாக்கி தமிழக அரசின் ஒப்புதலுடன் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த முயற்சிக்கு வீடுகள் வணிக நிறுவனங்கள் தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரும் மாநகராட்சி நகராட்சி நிர்வாக ஊழியர்களுடன் இணைந்து தமிழக அரசின் நெகிழி ஒழிப்பு மற்றும் குப்பையில்லா நகரங்களை உருவாக்கும் திடக்கழிவு மேலாண்மை முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.