நம்பிக்கை:
“நம்பிக்கைதானே வாழ்க்கை” என பலர் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மனமோ எப்பொழுதும் ஒன்றை முழுமையாய் நம்பவிடாமல் வேடிக்கை காட்டுகிறது.
நம்பிக்கை என்றால் என்ன??.
நம்பிக்கை என்றால் என்ன என்று சத்குருவின் கூறுவது
இன்றைய உலகின் துரதிருஷ்டம் என்னவென்றால், மனிதர்கள் சமயம் என்பதைவரையறுக்கப்பட்ட சில நம்பிக்கைகளின் தொகுப்பாகப் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். நீங்கள் நிரதரமானவர் இல்லை என்பதையும் ,இன்று வந்து நாளை போகிறவர் என்பதையும் புரிந்துகொண்டு விட்டால், நீங்கள் நம்பிக்கையை உணர தொடங்குவிர்கள் .
நம்பிக்கை
நம்பிக்கையை எங்கு வைத்தீர்கள்??
புலியின் பல்லில் வைத்தீர்கள்!
நரியின் கொம்பில் வைத்தீர்கள்!
ராசி கல்லில் வைத்தீர்கள் !
கிளியின் சீட்டில் வைத்தீர்கள்
நம்பிக்கையை நீங்கள்
உங்களுக்குள் வைத்தீர்களா???….
நம்பிக்கையின் பாதையில் நடை பெற வேண்டுமென்றால் சிறு குழந்தையின் வெகுளியான மனோ பாவம் உங்களுக்கு இருக்கவேண்டும்..