உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும்.
மேலும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளுக்கு கிடைக்காது. இதனால் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, உரிமை மின்சாரத்தை நீக்கி உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம். உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்.
உரிமை மின்சாரத்தை நீக்கி
உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம்.
உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்…
அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும்.— வைரமுத்து (@Vairamuthu) May 19, 2020
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களின் நெருக்கடியான சூழைலை புரிந்து திருத்தங்கள் செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.