Categories
சினிமா தமிழ் சினிமா

“உடனே ஹெல்மெட் போடுங்க”…. நடுரோட்டில் ரசிகர்களிடம் அக்கறை காட்டிய ராஷ்மிகா…. வைரல் வீடியோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் புஷ்பா படத்தில் சாமி சாமி பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகாவுக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தற்போது தமிழில் நடிகர் விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இசை வெளியீட்டு விழா முடிவடைந்த பிறகு நடிகை ராஷ்மிகா காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ராஷ்மிகாவின் காரை ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ராஷ்மிகாவின் கார் சிக்னலில் நின்ற போது ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக அருகில் வந்தனர். அப்போது நடிகை ராஷ்மிகா ரசிகர்கள் மீது அக்கறை கொண்டு ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டுங்க. இப்பவே போடுங்க என்று அன்பாக கட்டளையிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |