Categories
உலக செய்திகள்

7 அடி நீளமுடைய தாவர உண்ணி…. ஆராய்ச்சியாளர்கள் வைத்த புதிய பெயர்…. பிரபல நாட்டில் கிடைத்த புதை படிவம்….!!

71/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வந்துள்ள 7 அடி நீளமுடைய டைனோசரின் புதைபடிவங்கள் தென்னமெரிக்க நாடான சிலியில் கண்டறியப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியிலுள்ள பட்டகோனியா என்னும் பகுதியில் 71/2 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்துள்ள 7 அடி நீளமுடைய டைனோசரின் புதை படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த தாவர உண்ணியான டைனோசரின் வால்பகுதி கூர்மையான கத்திகள் அடுக்கப்பட்டதை போன்று காணப்பட்டுள்ளது. அவ்வாறு கத்திகள் கொண்டு அடுக்கப்பட்ட கூர்மையான வால் பகுதியினை வைத்து அந்த தாவர உண்ணியான டைனோசர் தங்களை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதோடு மட்டுமின்றி கத்தியை கொண்டு அடுக்கப்பட்டதை போன்ற வால் அமைப்பினையுடைய அந்த 7 அடி நீளமுள்ள டைனோசருக்கு ஸ்டெகோரஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |