Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இறப்பில் மர்மம்” தோண்டி எடுக்கப்பட்ட வாலிபரின் உடல்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சாமிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி தனது குடும்பத்தினருடன் கள்ளியூர் கிராமத்தில் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றார். இதனையடுத்து மூர்த்தியின் மகன் சாமிநாதன் செங்கல் சூளை அருகே கடந்த 31-ஆம் தேதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அதன்பின் சாமிநாதனை மூர்த்தி மீட்டு சுடுகாட்டில் புதைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து மூர்த்தி கடந்த 6-ஆம் தேதி தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பவானி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சாமிநாதனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவின்பேரில் தாசில்தார் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் சாமிநாதன் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரது உடலை மீட்டு மருத்துவர்கள் மூலம் அங்கேயே பிரேத பரிசோதனை செய்த பிறகு மீண்டும் உடல் புதைக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வின் அறிக்கைகள் வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார்கள். இதனையடுத்து 8 நாட்களுக்கு பிறகு வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |