Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு…. சிறப்பு ரயில்கள் இயக்கம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழகம் வழியே தெலங்கானா -கேரளம் இடையில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வேயானது ஏற்பாடு செய்து உள்ளது. இதற்குரிய முன்பதிவு இன்று (டிச.25) காலை 8 மணிக்கு துவங்கியது. அந்த வகையில் ஹைதராபாத்திலிருந்து டிச.,29 ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் டிச.,31 ஆம் தேதி அதிகாலை 3:50 மணிக்கு கோட்டயம் வந்து சேரும். மறு மாா்க்கமாக டிச.,.31 ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு கோட்டயத்திலிருந்து புறப்பட்டு ஜன.,1 ஆம் தேதி இரவு 9:15 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். இதேபோல் நா்சாபூரிலிருந்து டிச.,27 ஆம் தேதி காலை 11:10 மணிக்குப் புறப்பட்டு, கேரளத்தின் கண்ணூருக்கு டிச,.28 ஆம் தேதி மாலை 5:15 மணிக்கு வந்தடையும்.

மறு மாா்க்கமாக டிச,.28 ஆம் தேதி இரவு 10:55 மணிக்கு புறப்பட்டு டிச,.30 ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் நா்சாபூருக்கு சென்றடையும். அதேபோல் டிச.28 ஆம் தேதி பிற்பகல் 1:30 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் டிச.,29-ஆம் தேதி இரவு 7 மணிக்கு கொல்லம் வந்தடையும். மறு மாா்க்கமாக கொல்லத்திலிருந்து 29 ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு 31-ஆம் தேதி அதிகாலை 4:50 மணியளவில் செகந்திராபாத் சென்றடைகிறது. நா்சாபூரிலிருந்து டிச 31-ஆம் தேதி மாலை 4:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், ஜனவரி 1 ஆம் தேதி மாலை 5:15 மணிக்கு கண்ணூா் வந்தடைகிறது. மறு மாா்க்கமாக ஜனவரி 1 ஆம் தேதி இரவு 10:55 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு, ஜனவரி 2 ம் தேதி இரவு 11:45 மணிக்கு நா்சாபூா் சென்றடைகிறது. மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் தமிழகத்தில் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோயமுத்தூா் நிலையங்களில் நின்று செல்லும்..

Categories

Tech |