சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தின் போது சென்னை முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்த கொண்டாட்டங்களின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31ஆம் தேதி இரவு முதல் மறுநாள் வரை 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள் மூடப்பட இருக்கிறது. அத்துடன் சுமார் 500 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.