புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் தங்கள் கொண்டாட்டங்களை ஹோட்டல்களில் பகல் நேரத்தில் கொண்டாடினர்.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் பண்ணை வீடுகளில் பகலில் புத்தாண்டை கொண்டாட இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 12.30 மணிக்கு மேல் சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தொடங்கினர். அதற்கான டிக்கெட்டுகளையும் இளைஞர்கள், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
அந்த டிக்கெட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தை இரவு 9.30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பகல் நேர புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிகளவில் பங்கேற்றனர். பலர் குடும்பத்தோடு தங்களது புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.