Categories
Uncategorized தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. 20 நாட்களில் 200 நபர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. அதிகபட்சமாக மகராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் தலா 54 பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மும்பையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கும் திட்டம் இல்லை என்று மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுமக்கள் அனைவரும் அரசு பிறப்பித்துள்ள நிலையான வழிகாட்டு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியபோது “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் முறையாக அதனை பின்பற்ற வேண்டும்.

இதனை மும்பை காவல்துறையும், மாநகராட்சியும் கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு இரு நாட்கள் அரசு தடை விதித்துள்ளது. பண்டிகை காலங்களில் பொது மக்கள் ஒரே இடத்தில் கூடும்போது தொற்றுநோய் பரவ வாய்ப்பு இருப்பதால் அதனை தவிர்க்கும் வகையில் வரும் டிசம்பர் 31 ம் தேதியும், ஜனவரி 1-ஆம் தேதியும் அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |