பூங்காவில் உள்ள புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் மாருதி நகரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா புதர் மண்டி இருக்கிறது. இதனால் பாம்புகள் வசிக்கும் கூடாரமாக பூங்கா மாறிவிட்டது. மேலும் இங்கிருந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும் பாம்புகள் படையெடுத்து செல்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பூங்காவில் உள்ள புதர்களை அகற்றி பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.