புதருக்குள் கிடந்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இருக்கும் பசுமை பூங்கா எதிரில் சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள புதரில் எலும்புகள், மண்டை ஓடுகள் போன்றவை கிடந்ததை பார்த்து சிறுவர்கள் அச்சத்தில் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதுபற்றி சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மண்டை ஓடுகள் எப்படி வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.