Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

புதர்போல் காட்சியளிக்கிறது…. நடவடிக்கை எடுக்கக்கோரி…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

போலீஸ் அலுவலகம் அருகில் செடி கொடிகள் வளர்ந்து புதர் போல் இருப்பதால் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் இடித்து அகற்றப்பட்டு பின் அப்பகுதி திறந்தவெளியாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது .

இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் சேரும் குப்பைகளை அருகில் கொட்டுகின்றனர். இதன் காரணமாக போலீஸ் அலுவலகம் குப்பை மற்றும் புதருக்குள் சிக்கியது போல் இருக்கிறது. இதனை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |