Categories
உலக செய்திகள்

புதின் ஒரு கொலையாளி… ஜோ பைடன் கடும் விமர்சனம்… மோதிக்கொள்ளும் அமெரிக்கா-ரஷ்யா… பரபரப்பு…!!!

வாஷிங்டனில் இருக்கின்ற அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதரை அங்கிருந்து நாடு திரும்ப ரஷ்ய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியிலிருந்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றியை தனதாக்கினார். இந்தத் தேர்தலில் அமெரிக்க உளவுத்துறையின் மூலம் ரஷ்ய அதிபரின்  தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோ பைடனை தோற்கடிப்பதற்காக முன்னாள் குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பிவிற்கு ஆதரவாக ரஷ்ய அதிபர் புதின் முயற்சி செய்ததாக உளவுத்துறை கூறியுள்ளது.

மேலும் ரஷ்ய அதிபர் புதினும் அவரது நிர்வாகமும்  ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக  ஜோ பைடன் மீது தவறான நிருமணமாகாத குற்றச்சாட்டுகளை பரப்பியதாக தெரியவந்தது. இதுபோன்று ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அவரது நிர்வாகமும்  ரஷ்ய எதிர்கட்சி தலைவரான அலெக்ஸி நாவல்னிக்கு விஷம் கொடுத்ததற்காக அமெரிக்கா அவர்கள் மீது பெரும் கண்டனம் தெரிவித்தது. மேலும் அலெக்சிநாவல்னியை  சிறையிலிருந்து விடுவிப்பதற்காக அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மறுபடியும் ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்கா அதிபர் தேர்தலில் தலையிடுவது குறித்து பரபரப்பு எழுந்துள்ளது. இதைப்பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது ரஷ்ய அதிபர் புதின் அதற்கு விலை கொடுக்க வேண்டுமென்றும் அவர் ஒரு கொலையாளி என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். வாஷிங்டனில் அமெரிக்காவிற்கான ரஷிய தூதரான அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப கோரி ரஷ்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனைப் பற்றி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்க ரஷ்ய உடனான உறவுகளின் பின்னணியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் நடத்துவதற்காக ரஷ்ய தூதர்கள் மாஸ்கோவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர் என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து ரஷ்ய துணை வெளியுறவு துறை மந்திரி செர்ஜி ரியாப்கோவ் “ரஷ்யா அமெரிக்காவின் உறவு மேலும் மோசம் அடைவதற்கான காரணம் அமெரிக்காவிடம் தான் உள்ளதாகவும் ஆகையால் அமெரிக்கா ரஷ்யா இடையேயான மோதல் போக்கு முற்றி வருவதாகவும்” கூறியுள்ளார்.

Categories

Tech |