Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய்களிலிருந்து தப்பிக்க… இதைத்தொடர்ந்து குடியுங்கள்…!!

தினமும் புதினா தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் புதினா இலைகளைப் போட்டு அதனுடன் எலுமிச்சை துண்டுகள் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து இஞ்சியையும் இடித்து போட்டுக்கொள்ளவும். இதை நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவ்வபோது குடிக்கவும்.

பயன்கள் 

புதினா தண்ணீரில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.

புதினா தண்ணீர் உடலில் நீர் சத்தை அதிகரித்து உடலில் இருக்கும் வெப்பத்தை குறைக்க கூடியது.

புதினா தண்ணீரில் இருக்கும் நறுமணம் குமட்டல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் ஏற்படும் சோர்வை போக்கும்.

இந்தப் புதினா தண்ணீர் சுவாசப்பாதையை  சுத்தமாக்கி சுவாச பிரச்சனைகள், காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா நோய் போன்று எதுவும் வராமல் தடுக்கவும் வந்தால் குணமாக்கவும் உதவிபுரிகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி தீர புதினா தண்ணீர் மருந்தாகும்.

புதினா தண்ணீரை தொடர்ச்சியாக குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்களின் தாக்கம் வராமல் தடுக்கும்.

புதினா தண்ணீர் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைத்து அதிகப்படியான உடல் எடையை குறைக்க செய்யும்.

புதினா தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் சருமம் பொலிவாகும்.

Categories

Tech |