வீட்டிலேயே புதினா வளருங்கள், பயன் பெறுங்கள்:
மருத்துவ குணம்:
வயிற்றில் இருக்க கொடிய புண் ஆற்றிவிடும், லெமென் ஜூஸ் போட்டு அதில் புதினா இலையை போட்டு குடித்து வாருங்கள்.
நமக்கு தேவையான புதினா செடியை இயற்கையாக, செயற்கை மருந்துகள் இல்லாமல் வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளலாம், சிக்கன்குர்மா, குஸ்க்கா, கிரேவி போன்ற இந்த மாதிரி சாப்பாடுகளுக்கு புதினா பயன்படக்கூடியது.
கடையில் ஒரு கொத்து பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று சொல்வார்கள்.வீட்டில் நீங்கள் வளர்த்தால் அதுவே ஆட்டோமெட்டிக்கா தளதளன்னு வளர்ந்திடும். வீட்ல இருக்குற மண்ணில் ஊன்றி வைக்கலாம்.
அப்படி வீட்ல மண் தரை இல்லை என்றால், ஒரு மண் சட்டி வாங்கி அதுல மண்ணள்ளிப் போட்டு அதில் புதினா ஒன்றை வைத்தாலும் போதும். நல்ல வளரும் நாம் எப்படி ஊன்ற வைக்கிறது.
இப்போ கடையில வாங்குற புதினா ஒரு குத்து அதில் இருக்கும் இலை எல்லாத்தையும் பிச்சி எடுத்துட்டு அதோட தண்டு மட்டும், தண்டு பகுதியை மட்டும் ஊன்ற வேண்டும்.
அதன் கீழ் பகுதியைத்தான் ஊன்ற வேண்டும். அதற்கு மாறாக ஊன்றினால், செடி வளராது தலைகீழாக செடி ஒன்றை வைத்தீர்கள் என்றால் செடி வளராது. அந்த இலையை எப்படிநீக்கி கொண்டோமோ அதேபோல, அது மேல வருமாறு அதன் தடித்த பகுதி கீழே வருமாறு ஊன்றி வைக்க வேண்டும்.
வீட்டுக்கு தேவையான புதினா நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். இது போன்றும் நாம் ஒரு மாதம் மண்ணில் வைக்கவேண்டும். ஒரு குச்சியை வைத்து அந்த தண்டு வைக்கிற அளவுக்கு குத்தி கொள்ளுங்கள், குத்திவிட்டு அதுல நம்ம எடுத்து வைத்திருக்கும், புதினா குச்சியை ஊன்றவேண்டும்.
அவ்வளவுதான் பத்து பதினைந்து நாள் கழித்து பார்த்தால் நம் வீட்டுக்கு தேவையான அளவுக்கு வளர்ந்து விடும்.